தமிழ்நாடு

சென்னையில் பரபர...ஆன்லைன் சூதாட்டத்தால் மீண்டும் அரங்கேறிய தற்கொலை சம்பவம்...!

Tamil Selvi Selvakumar

ஆன்லைன் சூதாட்டத்தால் சென்னையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் வினோத் குமார். மருந்து விற்பனை பிரதிநிதியான இவர் கடந்த சில நாட்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிக அளவிலான பணத்தையும் சூதாட்டத்தில் இழந்ததால் வினோத்குமார் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மாம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வினோத்குமார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகி வருவது வேதனை அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், சமூகஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது.