தமிழ்நாடு

மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சர்ச்சை.. மருத்துவ கல்லூரி முதல்வர் அதிரடி மாற்றம்!!

மதுரை அரசு  மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையாகிய நிலையில், அக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Suaif Arsath

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், மதுரை மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வௌ்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இப்போகிரேடிக் உறுதி மொழிக்கு பதில் மகரிஷி சரத் சப்த் எனும் உறுதி மொழி ஏற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறியுள்ள தமிழக அரசு, கல்லூரி முதல்வர் இரத்தினவேலை அப்பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளது. மேலும் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும் அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி தன்னிச்சையாக விதிமுறையை மீறி  மகரிஷி சரத் சப்த்  உறுதி மொழி எடுக்க வைத்ததற்கு துறை ரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களிலும் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும் இப்போகிரேடிக் உறுதிமொழியை தவறாது கடைபிடிக்கவும் மருத்துவக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.