தமிழ்நாடு

வெப்பச்சலனம் மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை மகிழ்ச்சியில் மக்கள்!!!!

Malaimurasu Seithigal TV

மதுரை மாநகரில் வெப்பச்சலனம் காரணமாக கொட்டி தீர்த்த கனமழை திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி.

வெப்பச் சலனம்

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக  இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்த நிலையில் இன்று மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளின் மாலை ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை என்பது பெய்தது.

வெப்பம் தணிந்து குளிர்ச்சி

குறிப்பாக மாநகர் பகுதிகளான பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் சுற்று வட்டார பகுதிகள், சிம்மக்கல், ஆரப்பாளையம், கோரிப்பாளையம், தல்லாகுளம் என பல பகுதிகளில் கனமழை பெய்தது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

பாதிக்கும் நிலை

திடீரென மழை பெய்ததால் அதில் சிறுவர், சிறுமியர் மழையில் துள்ளி குதித்து விளையாடினர். சிறுவன் குட்டிக்கரணம் அடித்து சாலையின் மழையை ரசித்தபடியே சென்றான். ஆரப்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையால் சாலையோர வியாபாரிகள், வேலை முடிந்து வீடு திரும்பும் பொதுமக்களும்  பாதிக்கும் நிலை ஏற்பட்டது.