கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட அனுமதிக்கோரி சன் டிவி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி உள்ளிட்டோர் நடிப்பில் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
A சான்றிதழுடன் படம் வெளியான நிலையில், U/A சான்றிதழுடன் படத்தை வெளியிட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக்கோரி சன் டிவி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அதிகளவிலான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் கூலி படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்படுவதாக தணிக்கை வாரியம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கூலி படத்தை விட அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்த KGF மற்றும் பீஸ்ட் படங்களுக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, U/A சான்றிதழுடன் கூலி படத்தை வெளியிட அனுமதிக்குமாறு தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் முறையிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி டி.வி.தமிழ்செல்வி நாளை விசாரிப்பதாக தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.