தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தனியார் தொலைக்காட்சிகளுக்கு உத்தரவிட முடியாது.! உயர்நீதிமன்றம் கருத்து.! 

Malaimurasu Seithigal TV

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்படி தனியார் தொலைக்காட்சிகளுக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

மன அழுத்தத்துக்கு ஆளாகும் மக்களுக்காக தினமும் ஒரு மணி நேரம் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கொரோனா  விழிப்புணர்வு ஏற்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்த முடியாது என்றும், செய்தித் தொலைக்காட்சிகள் கொரோனா குறித்த செய்திகளை ஒளிபரப்பாமல் தவிர்க்க முடியாது என்றும்,  செய்திகளில்  தவறிருந்தால் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தது. 

மேலும் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் விழிப்புணர்வு செய்திகளை ஒளிபரப்புகிறது. தடுப்பூசி போட மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது என்றும், பொது நலனைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது குறித்து மத்திய, மாநில அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.