இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று புதிதாக 1, 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரில் இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34, 317 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தோரில் ஒரே நாளில் 1,807 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,407 ஆக உள்ளது.
சென்னையில் புதிதாக 187 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவையில் 241 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.