தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 1,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,37,010 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  தமிழகத்தில் மேலும் 1,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் மொத்த பாதிப்பு 26 லட்சத்து 37 ஆயிரத்து 10ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறியுள்ள சுகாதாரத்துறை, தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 212 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளதகாவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 16,549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..