தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுக்கு இதுவரை 26 லட்சத்து 55 ஆயிரத்து 572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 635 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில்,  இதுவரை 26 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பில் அதிகபட்சமாக கோவையில் 198 பேருக்கும், சென்னையில் 194 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 263ஆக உள்ளது.