தமிழ்நாடு

பள்ளி மாணவிகளுக்கு கொரேனா தொற்று... நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர்கள் கலக்கம்...

பரமத்திவேலூர் அருகே பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் கொரோனா தோற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் நலன் கருதி அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமமுறைகளுடன்  9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ  மாணவிகளுக்கு பள்ளியை கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டது.  

அதன் அடிப்படையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் மட்டும் பள்ளிக்கு சென்றனர்.  இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு மாணவிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் சென்ற பின்னர் தகவல் தெரிந்தால், பள்ளியில் பயிலும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொடருக்கான ஆய்வு செய்வது குறித்து நாளை தெரியவரும். இந்நிலையில் பள்ளியில் இரு மாணவிகளுக்கு கொரோனா இருப்பது குறித்து தகவலறிந்த அப்பள்ளி  மாணவிகளின் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.