தமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று...பெற்றோர்கள் அச்சம்....

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சைனிக் பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Malaimurasu Seithigal TV

உடுமலையை அடுத்த அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 750 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அதில் 10 மற்றும் 12- ம் வகுப்பு மாணவர்கள் 95 பேர் படித்து வருகிறார்கள். இதற்கிடையில் பள்ளியில் பயின்ற மாணவர்கள் கொரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது.

அதில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள்  அனைவரும் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு டாக்டர்கள் மாணவர்களுக்கு  சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.