தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV
தமிழகத்தில் கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிதாக ஆயிரத்து 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 55 ஆயிரத்து 664 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 145 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதன் மூலம், கொரோனா வைரசில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 434 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் 21 ஆயிரத்து 207 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை, தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு மேலும் 28 பேர் உயிரிழந்ததாகவும், இதுவரை 34 ஆயிரத்து 23 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 756 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, இன்று ஆயிரத்து 859 ஆக சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது, அம்மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.