தமிழ்நாடு

இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது...!

Tamil Selvi Selvakumar

2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் 11 சுயநிதி கல்லூரிகள், ஆயுர்வேத அரசு கல்லூரி மற்றும் யுனானி மருத்துவக் கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த கல்லூரிகளில் 2023 - 2024 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 

இன்றைய கலந்தாய்வில் சிறப்புப் பிரிவு, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் உள்ள 92 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

நாளை முதல் 29 ஆம் தேதி வரை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 31 ஆம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் நவம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.