தமிழ்நாடு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு...! நாளை தொடக்கம்...!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை(நாளை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. 


தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று வெளியிட்டார். அதன் படி 2022 - 23 ஆம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கு மொத்தமுள்ள 8ஆயிரத்து 225 இடங்களுக்கு ஆன்லைன் மூலமாக கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 


இந்நிலையில் புதன்கிழமை (நாளை) முதல் வரும் 26ஆம் தேதி வரை சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், 20 ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.