சென்னை ஓட்டேரி ஸ்ட்ரான்ஸ் சாலை 3 வது தெருவில் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர் நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில் வெடி சத்தம் கேட்டது சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சத்தம் காதை கிழிக்கும் வகையில் கேட்டுள்ளது.
இதனால் அலறி துடித்த பகுதி மக்கள் சாலையில் வந்து பார்த்தபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்த போது நாட்டு வெடிகுண்டு தான் வீசியது தெரியவந்தது.
பேசிவிட்டு தப்பிய நபர்கள் முகத்தில் முகமுடி அணிந்து கொண்டு டியோ என்ற இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது தெரியவந்துள்ளது இதுவரையில் இப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசியது இல்லை என்றும் முதல் முறையாக மறுமணவர்கள் இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியில் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலையில் ஊசி விட்டு சென்றதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் வீடுகளில் வீசி இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர் உடனடியாக நாட்டு வெடிகுண்டை வீசிய மர்ம நபர்கள் யார் அவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.