தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி மனு... காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு...

நடிகை சாந்தினி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன்  கோரிய வழக்கில் காவல்துறை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Malaimurasu Seithigal TV
துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் அடிப்படையில் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  தலைமறைவாக இருந்த மணிகண்டனை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.
இதனையடுத்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனை வரும் ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில்,  ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வகுமார் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ஜாமீன் மனு மீது வருகிற 24ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அடையாறு அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.