தமிழ்நாடு

"தேவையின்றி ஆளுநரை விமர்சிப்பதை திமுகவினர் கைவிட வேண்டும்" சி.பி. ராதாகிருஷ்ணன்!!

Malaimurasu Seithigal TV

மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்து இருப்பது எல்லோராலும் வரவேற்கப்பட்டு இருப்பதாக ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட்டைப் பொறுத்தவரை யார் கொண்டு வந்தார்கள் என்பது தெரியும் எனவும்  தேவையில்லாமல் ஆளுநரை விமர்சிக்கின்ற போக்கை திமுகவினர் கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இன்றி நள்ளிரவு முதல், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமே உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுங்க கட்டணம் உயர்வுக்குப் பின்பு எத்தனை நான்கு வழி சாலைகள் வந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் எனவும், கட்டணத்தை மட்டும் பார்க்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.