தமிழ்நாட்டில் MLA-க்கள் மத்தியில் 'குதிரை பேரம்' நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பரபரப்பு குற்றசாட்டுகளை வைத்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த பரபரப்பு குற்றச்சாட்டினை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர், MLA-க்களை வாங்கி விற்கும் 'குதிரை பேரம்' தற்போது தமிழ்நாட்டிலும் கண்ணுமுன்னே நடைபெறுவதாக கூறியுள்ளார். மேலும், வட இந்தியாவில் நடந்தது போல இப்பொது தமிழ்நாட்டிலும் மெதுவாக இது பரவி வருவதாக கூறியுள்ளார். இதனை உடனடியாக தடுக்கவில்லை என்றால், மாநிலத்திற்கு நல்லதல்ல என்றும் தனது குற்றசாட்டுக்களை வைத்துள்ளார். மேலும், "அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் நலன், ஆட்சியில் நீடிப்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்" என்றும் அவர் கூறியுள்ளார். மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களிப்பது அந்த கட்சியின் கொள்கையை நம்பித்தான், தேர்தலுக்கு பின் MLA-க்கள் கட்சி மாறினால் அது மக்களின் தீர்ப்பிற்கு துரோகம் என்றும், இது ஜனநாயகத்திற்கு பெரிய நெருக்கடி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ யார் குதிரை பேரத்தில் ஈடுபட்டாலும் அதை இடதுசாரிகள் எதிர்ப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், "எங்களிடம் அமைப்பு ரீதியாக வலிமையான தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது, அதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்திரு போட்டியிட்டு எங்களின் பலத்தை நிரூபிக்க தயாராக இருக்கிறோம்" என்று வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகள் தங்களது ஆதரவினை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கியிருந்தனர். குறிப்பாக "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்பதை தவிர்த்து வெளியில் இருந்து ஆதரவினை வழங்கினர். தற்போது வரவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து தேர்தல் களம் காண்பார்கள் என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்