தமிழ்நாடு

பட்டாசு ஆலை விபத்து : முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு...!

Tamil Selvi Selvakumar

தருமபுரி பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில், ஏற்பட்ட தீ விபத்தில் பழனியம்மாள் மற்றும் முனியம்மாள் ஆகிய இருவர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.

உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிவலிங்கம் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.