தமிழ்நாடு

களைகட்டிய அருவிகள்...விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்...!

Tamil Selvi Selvakumar

விடுமுறை தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் மெயின் அருவி, சினி பால்ஸ், முதலை பண்ணை, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதனை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் அழகை ரசித்தபடி படகு சவாரி செய்து வருகின்றனர். 

தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து சென்றனர். புகழ் பெற்ற சுற்றுலா தளமான குற்றால அருவிகளில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் காலமாகும். தற்போது பருவமழை குறைந்தளவே பெய்ததால், அருவிகளில் சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. ஆனால், வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் தற்போது குறைந்தளவே கொட்டுகிறது.