தமிழ்நாடு

வயலில் பீய்ச்சியடித்தபடி வெளியேறும் கச்சா எண்ணெய்... விவசாயி அதிர்ச்சி

மன்னார்குடி அருகே  ஓஎன்ஜிசி குழாய் உடைந்து வெளியேறி வரும் கச்சா எண்ணெயால் விளைபயிர்கள் சேதமடைந்தன. 

Malaimurasu Seithigal TV

மன்னார்குடி அருகே  ஓஎன்ஜிசி குழாய் உடைந்து வெளியேறி வரும் கச்சா எண்ணெயால் விளைபயிர்கள் சேதமடைந்தன. 

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் வயலில் ஓஎன்ஜிசி சார்பில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகளவிலான கச்சா எண்ணெய் வெளியேறி விளைநிலங்களில் படர்ந்துள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு, முளைத்திருந்த நெற்பயிர்கள், முற்றிலும் நாசமாகியுள்ளன. 

இதனிடையே, கச்சா எண்ணெய் வெளியேற்றத்தை தடுப்பதற்கான பணிகள், இதுவரை மேற்கொள்ளப்படாததால், விளைநிலத்தில் பீய்ச்சி அடித்தபடி தொடர்ந்து வெளியேறி வரும் கச்சா எண்ணெய், அருகாமையில் உள்ள விளை நிலங்களுக்கும் பரவக்கூடும் என  விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும்  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள விவசாயிகள், பாதிக்கப்பட்ட விளை நிலத்திற்கு ஒஎன்ஜிசி நிறுவனம் உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.