தமிழ்நாடு

தமிழகத்தில் 6வது நாளாக இரண்டாயிரத்திற்கு கீழ் தினசரி கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் 6வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து தினசரி பாதிப்பு ஆயிரத்து 819ஆக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து, 24 ஆயிரத்து 25ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்று காரணமாக மொத்தம் 33 ஆயிரத்து 889 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 2 ஆயிரத்து 583 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 175 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை 127 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.