தமிழ்நாடு

வேங்கை வயல் வழக்கு விசாரணையை கண்காணிக்க...சென்னை உயர்நீதிமன்றம் முடிவு..!

Tamil Selvi Selvakumar

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக நடைபெறும் சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனிதகழிவு கிடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து வேங்கைவயல் விவகாரத்தில் புகார் அளித்து 90 நாட்கள் கடந்தும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை எனவும், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரியும் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வு, அரசு தரப்பு ஆவணங்களை பரிசீலனை செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது என கேள்வி எழுப்பியது. பின்னர், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.