தமிழ்நாடு

டெல்லி தலைமை தான் முடிவு  செய்யும்... இபிஎஸ் அறிவிப்பு!!

Malaimurasu Seithigal TV

அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதா அல்லது வெளியெறுவதா என்பதை டெல்லி தலைமை தான் முடிவு  செய்யும் என்று எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். 

சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்போது  சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மேள தாளங்கள் முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கும்ப மரியாதை என உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வது குறித்து  டெல்லி தலைவர்களே முடிவு செய்வார்கள் என்றும் மாநிலத்தில் உள்ள பாஜகவினர் அல்ல  எனவும் அவர் குறிப்பிட்டார்.  மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்ப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி   கூறியுள்ளார்.  மேலும், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்தில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாகவும்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.