தமிழ்நாடு

பருத்தி கொள்முதலுக்கு தனி ஆணையம் கேட்டு கோரிக்கை...அமைச்சர் காந்தி பதில்!

Tamil Selvi Selvakumar

பருத்தி கொள்முதல் செய்து நூற்பாலைக்கு வழங்குவதற்கு தனி ஆணையம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், பருத்தி கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய தனி ஆணையம் அமைக்கப்படுமா என திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி, ஒரு சதவீதம் செஸ் வரியை உடனடியாக குறைத்த அரசு திமுக எனவும், நமது தேவைக்கு பிற மாநிலங்களில் இருந்து பருத்தி வாங்குவதால் இது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.