தமிழ்நாடு

உறுதி இல்லாத பள்ளி கட்டடங்கள் இடிப்பா..? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை...

தமிழகத்தில் உறுதி இல்லாத பள்ளி கட்டடங்களை இடிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

Malaimurasu Seithigal TV

நெல்லையில், அரசு உதவிபெறும் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணை செய்ய உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள சேதமடைந்த கட்டடங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றன. அடையாளம் காணப்படும் பள்ளி கட்டிடங்களை இடிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். 

இதில் துறையின் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கொண்டனர். இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடிப்பது,  மாற்று ஏற்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.