தமிழ்நாடு

சிகிச்சை அளிக்க தாமதித்ததைக் கண்டித்து மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்க தாமதம் ஆனதால் தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Tamil Selvi Selvakumar

பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்தின் பேரனை நாய் கடித்ததை அடுத்து, அவரை அரசு மருத்துவமனைக்கு குழந்தையின் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது பணியில் இருந்த பெண் மருத்துவர் விஜயலட்சுமி மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த சிவக்கொழுந்து, மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து தமது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.