தமிழ்நாடு

புதுக்கோட்டையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்!!

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டையில் சிறுமி உட்பட ஐந்து பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அரசு சார்பில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 3 இளைஞர்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் ஐந்து பேரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 76 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு டெங்கு பாதிப்பு அடைந்துள்ளதால், பதிப்படைந்தோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.