திருத்தணி முருகன் கோயில் கந்தசஷ்டி லட்சார்ச்சனையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி, புஷ்பாஞ்சலி, லட்சார்ச்சனை நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில், லட்சார்ச்சனை நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.