தமிழ்நாடு

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன் அதிகம் - டி.கே.சிவகுமார்

மேகதாது அணை கர்நாடகாவைக் காட்டிலும் தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

மேலும் தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது அவர்களின் உரிமை அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் சிவகுமார் தெரிவித்தார். இது போன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்காகத்தான் மேகதாது அணை வேண்டும் என்று தாங்கள் கேட்பதாகவும் எல்லைப் பகுதியில் கட்டப்படும் இந்த அணையில் இருந்து தாங்கள் தண்ணீரை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்றார்.