தமிழ்நாடு

"தொழில்நுட்பங்கள் இருந்தாலும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது" - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் உலகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் ஆன்மீகத்தின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Tamil Selvi Selvakumar

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதானமும் மதமும் வேறு வேறு எனக்கூறினார்.

ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் எனக்கூறுவது சனாதன தர்மம் இல்லை எனவும் அது தர்மமே இல்லை எனவும் அவர் தெரிவித்தார். தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகவும் ஆன்மிகத்தின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் வழிமுறைகளில் இதனையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.