தமிழ்நாடு

”மாநிலத்தின் வளர்ச்சி....” முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்!!!

Malaimurasu Seithigal TV

மாநிலத்தின் வளர்ச்சி அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மாற்றுத்திறனாளிகள் கூட்டம்:

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் வாரிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதலமைச்சர், மாநிலத்தின் வளர்ச்சி ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாகவோ குறிப்பிட்ட பகுதியின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது என்றும், விளிம்பு நிலை மக்களுக்கும் அரசின் பயன் சென்றடைய வேண்டும் எனவும் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கலைவாணர் அரங்கில்..:

முன்னதாக சென்னை கலைவாணர் அரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர், வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 லட்சம் மதிப்பிலான  ஊக்கத்தொகைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டுத்துறை செயலர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.