தமிழ்நாடு

பழனி கோவிலை சுற்றி வளைத்த பக்தர்கள்.. விடுமுறையால் கடும் போக்குவரத்து நெரிசல்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில்  விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பழனி நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Suaif Arsath

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆனக்மீகத் தளம்.

தமிழழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவர். இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பழனி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ரோப் கார், இழுவை ரயில் நிலையங்களிலுமு் பக்தாகள் கூட்டம் அலைமோதியது. படிகள் வழியாகவும் ஏராமானோர் மலைக்கோயில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். முடி காணிக்கை செலுத்தும் இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்கள் வந்த வாகனங்களால் பழனி நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.