தமிழ்நாடு

தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்...!

Tamil Selvi Selvakumar

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, கும்பாபிஷேகம் முடிந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெறுவதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் அதிகளவில் பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர்.

அதிக கூட்டம் காரணமாக பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து சென்றனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கு கூடுதலாக பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்.