தமிழ்நாடு

காவலர்களுக்கு நடமாடும் கிளினிக்...தொடங்கி வைத்தார் டிஜிபி சங்கர் ஜிவால்!

Malaimurasu Seithigal TV

காவலர்களுக்காக நடமாடும் கிளினிக்கை டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

சென்னையில் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களுக்கான நடமாடும் கிளினிக்கை டிஜிபி சங்கர் ஜிவால் தொடக்கி வைத்தார். நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் என்கிற தனியார் நிறுவனத்துடன் இணைந்து காவலர்களுக்காக காவலர் குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று இந்த நடமாடும் மருத்துவ பரிசோதனை முகாம் மேற்கொள்ளப்படுகிறது.

இன்று முதல் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக இந்த நடமாடும் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் முகாமில் நீரிழிவு பரிசோதனை மட்டுமல்லாமல், நுரையீரல் செயல்பாட்டு சோதனைகள், கண் பரிசோதனை, ஆடியோ மெட்ரி பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு மற்றும் மருத்துவ ஆலோசனை உள்ளிட்டவற்றை காவலர் குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.