தமிழ்நாடு

கருப்பு பணத்தைக் கொண்டு மக்களுக்கு வங்கிக்கணக்கில் சேர்ப்பதாகக் கூறினாரே மோடி...?

Malaimurasu Seithigal TV

கர்நாடகா தேர்தலில் பாஜக தோல்வியை மறைக்கவே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்தாக திராவிட கழக தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். 

அரக்கோணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், திராவிட கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், 
" கருப்பு பணத்தை முழுமையாக ஒழிக்கவே பணமதிப்பிழப்பு கொண்டுவந்தாக ஒன்றிய அரசு தெரிவித்தது; புதிய இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்தனர். ஆனால் அறிவித்த சில நாட்களில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் வருவதாக ஆர்பிஐ தெரிவித்தது. மோடி அரசு உலகில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து மக்களுக்கு பதினைந்து லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவதாக தெரிவித்தார்.ஆனால் தற்போது வரையில் ஒரு ரூபாய் கூட வரவில்லை", என தெரிவித்தார்.  

அதோடு, கடந்த  முறை பணமதிப்பு இழப்பின் போது பிரதமர் மோடி காணொளி மற்றும் தொலைக்காட்சி  மூலமாக தெரிவித்தார். தற்போது ரிசர்வ் வங்கி மூலமாக இரண்டாயிரம் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது, முழுமையாக ஒன்றிய அரசின் நிர்வாக இழப்பை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது எனவும்  குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர்,  " கர்நாடகா தேர்தலில் பாஜக எந்த மாநிலத்திற்கும் ஒதுக்காத அளவிற்கு அதிக  நிதியை ஒதுக்கியது; ஆனாலும் மக்கள் பாஜக அரசை வெறுத்தனர். பாஜக  கர்நாடகா தேர்தலில் படுதோல்வி குறித்து யாரும் பேசக்கூடாது என இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளது ", என விமர்சித்தார். மேலும், எப்போதும்  பாஜக அரசு தோற்றாலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக்  கூறியுள்ளார்.