தமிழ்நாடு

”பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே பதிவாகியுள்ளது” - கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

Tamil Selvi Selvakumar

பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே பெய்துள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பட்டியலிட்டார்.  

எழிலகத்தில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரிடர் மீட்புப் படையினர் 400 பேர் தயார் நிலையில் உள்ளதாகவும், அவசர கால தொடர்ப்புக்கான உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், சென்னையில் 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட 43% குறைவாகவே பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.