தமிழ்நாடு

மாயமான பயிற்சி விஞ்ஞானியின் உடல் பாலாற்று படுகை இடுகாட்டில் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு...

Malaimurasu Seithigal TV

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விஞ்ஞானியாக இருப்பவர் சத்திய சாய் ராம். இவர் இங்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து Catagory - 1 ஆக பயிற்சி எடுத்து வருகிறார். சத்திய சாய் ராம் கல்பாக்கம் டவுன்சிப்பில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தின் விடுதியில் தங்கியிருந்த இவர் தினமும் காலையில் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி காலை 5 மணிக்கு தனது அறையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றநிலையில் விடுதிக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து புகாரின் பேரில் போலீசார் மாயமான விஞ்ஞானியை தேடிய நிலையில் வாயலூர் பாலாற்று படுகையையொட்டி வேப்பஞ்சேரி இடுகாடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் விரைந்து விசாரனை மேற்கொண்டதையடுத்து இறந்து போன நபர் சத்திய சாய் ராம் என்பது தெரியவந்தது. இவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.