தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு...  3 பேரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய கும்பல்- பதறவைக்கும் சிசிடிவி

திருப்பூரில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில்  3 பேரை அரிவாளால் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அமர்ந்து மது அருந்திய  இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஒரு தரப்பினர் அங்கிருந்த சென்ற போது அவர்கள் அமர்ந்திருந்த சேர் அருகில் இருந்தவர்கள் மீது பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவருடைய செல்போன் காணாமல் போயுள்ளது. செல்போன் பறிகொடுத்த நபர் எதிர் தரப்பினரை மடக்கி விசாரித்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் 3 பேரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.