தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது - UGC அறிவிப்பு

2015-2016-ம் ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என UGC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Suaif Arsath

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உரிய அனுமதி பெறாமல் தொலைதூரக்கல்வி மற்றும் திறந்தநிலைக்கல்வி மூலம் படிப்புகளை வழங்கியதால், அந்த படிப்புகள் மற்றும் அதன் மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் செல்லாது என தெரிவித்துள்ளது.

மேலும் UGC-இன் அனுமதி பெறாமல் 2015-2016-ம் ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி மற்றும் திறந்தநிலைக்கல்வி படிப்புகளை நடத்தி வருவதாகவும், இது விதிமீறல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியக் குழு, மாணவர்கள் யாரும் இனி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி படிப்பிலோ, திறந்தநிலை படிப்பிலோ சேர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.