தமிழ்நாடு

ஏழையின் வீட்டுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர்!

ஆம்பூர் தோல் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி பாதிக்கப்பட் தொழிலாளியின் வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறியுள்ளார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா.

Malaimurasu Seithigal TV

ஆம்பூர் அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆம்பூர் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்ட தொழிலாளியின் வீட்டிற்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்து மருத்துவர்களை வீட்டிற்கு வந்து சிகிச்சை அளிக்க கூறுவதாக பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஆறுதல் சொன்னார்.

திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று பார்வையிட்டு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கபடும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளும் வழங்கப்பட்டது. உடன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.

பின்னர் ஆம்பூர் மோதகப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பிரசாந்த் என்பவர் நேற்று முன் தினம் நடந்த தனியார் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கிய விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார்.

 அவரின் வீட்டிற்கே சென்ற மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உடல் நலம் குறித்து விசாரித்ததோடு, மருத்துவர்களை வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்கும் படி உத்தரவுகளை வழங்கினார்.

 மேலும் இளைஞருக்கு ஆறுதல் கூறி சென்றார்.