தமிழ்நாடு

வட்டார அளவிலான மகளிர் கபடி போட்டி...! 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்பு...!

திருவிடைமருதூர் வட்டார அளவிலான மகளிர் கபடி போட்டி திருப்பனந்தாளில் நடைபெற்றது...!

Malaimurasu Seithigal TV

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டார அளவிலான மகளிர் கபடி போட்டி திருப்பனந்தாள் எஸ்.கே.எஸ்.டி.எஸ். கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. திருப்பனந்தாள் எஸ் கே எஸ்.டி.எஸ் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் புகழேந்தி முன்னிலையில் நடைபெற்றது. இந்த மகளிர் கபடி போட்டியில் திருவிடைமருதூர் வட்டார அளவிலான திருப்பனந்தாள், திருவாய்பாடி, பந்தநல்லூர், நாச்சியார் கோயில், ஆடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் 14, 17, 19 வயதுடைய பிரிவுகளில் மாணவிகள் கலந்து கொண்டனர்.

14 வயது பிரிவில் திருவாய்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடத்தையும், 17 வயது பிரிவில் திருப்பனந்தாள் எஸ் கே எஸ் டி எஸ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடத்தையும், 19 வயது பிரிவில் பந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடத்தையும் பிடித்து  வெற்றி பெற்றனர். இந்த மூன்று அணியினரும் மாவட்ட அளவில் நடைபெற உள்ள மகளிர் கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.