தமிழ்நாடு

கட்சியின் பெயருக்கு கலங்கம் - பாமக நிறுவனர் அதிரடி

Malaimurasu Seithigal TV

பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு

கட்சியிலிருந்து நீக்கம்
 கரூர் மாவட்டம் கரூர் மாநகரம் பிரதட்சணம் சாலையைச் சேர்ந்த கே.குணசேகரன் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் என்று கூறிக் கொண்டு, புகார் மனுக்களை அனுப்பி பணம் பறிப்பது உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், இன்று  (19.01.2023) வியாழக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து  கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். அவருடன் பாமகவினர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்