edapadi vs mkstalin 
தமிழ்நாடு

இது எல்லாம் ஒரு கவுன்சிலர் வேலை.. முதல்வர் ஏன் செய்யவேண்டும்..? பயப்படுகிறாரா ஸ்டாலின்!?? - புட்டு புட்டு வைத்த மணி!!

இவை எல்லாம் ஒரு கவுன்சிலர் செய்யகூடிய வேலை, மிஞ்சி மிஞ்சி போனால் அதிகபட்சம் எம்.எல்.ஏ செய்ய வேண்டிய வேலை...

Saleth stephi graph

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது.  இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் ஓரணியில் தமிழகம்.

இன்னொரு பக்கம் “மக்களை காப்போம் ..  தமிழகத்தை மீட்போம் சுற்று பயணத்தில்” அதிமுக பொதுச்செயலாளர் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் தேர்தலுக்கு 9 மாதங்களுக்கு முன்னரே இரண்டு பிரதான கட்சிகளும் இப்படி பிரச்சாரத்தில் ஈடுபடுவது அரிதினும் அரிது.

அதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு வந்த தலைவர்களான எடப்பாடி, ஸ்டாலின் இருவருக்குமே தன்னம்பிக்கை குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு முன்பு பிரச்சாரத்தை ஆரம்பிப்பது இவர்களின் அச்சத்தையே காட்டுகிறது. ஆட்சியை இழந்துவிடுவோமோ என்ற பரிதவிப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. 10 தோல்வி பழனிசாமி என ஏற்கனவே அவர் கட்சியை சேர்ந்தவர்களே வசைபாடிக்கொண்டிருக்கின்றனர்.

அதற்கு எடப்பாடி தான் காரணம் ஜெயலலிதா இறந்த பின்னர் ஒருமுறை கூட அவர் தன்னை நிரூபிக்கவில்லை.  கட்சியையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி உள்ளார்” என பேசினார் 

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை எடுத்துக்கொண்டால் அதை பிரச்சாரமாகவும் பார்க்கலாம்..மக்கள் குறை தீர்க்கும் திட்டமாகவும் பார்க்கலாம் இது மக்களுக்கு நன்மைதானே? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மணி “இது யாருக்கு நன்மை “உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தால் என்னென்ன குறைகள் நிவர்த்தி செய்யப்படும்?  என மறு  கேள்வி எழுப்பினார். “பட்டா, ஆதார், ரேஷன் கார்டு பிரச்சனை, இவை அனைத்துமே இதனால் நிவர்த்தி செய்யப்படும், என நெறியாளர் கூறினார்..

அதற்கு பதில் சொல்ல பத்திரிகையாளர் மணி “இவை எல்லாம் ஒரு கவுன்சிலர் செய்யகூடிய வேலை, மிஞ்சி மிஞ்சி போனால் அதிகபட்சம் எம்.எல்.ஏ செய்ய வேண்டிய வேலை. இதனை சரிசெய்ய தான் உள்ளாட்சி பிரதிநிதிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இதனை அவசியம் என்ன என்பதுதான் என் கேள்வி. இவர்கள் ‘Branding’ தான் செய்கிறார்கள். யாரும் அரசியல் செய்வதில்லை. இவை எல்லாம் தேர்தலுக்கான வேலைதான். ஸ்டாலின் ஆட்சியை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில்தான் இருக்கிறார்" என பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.