Kamal hasan with mk stalin  
தமிழ்நாடு

“மாநிலங்களவை எம்.பி ஆகிறார் கமல்! வாக்கு தவறினாரா இபிஎஸ்? - கடுப்பில் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் அன்புமணி!

ஏற்கனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றும் விதமாக திமுக சார்பில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு எம்.பி சீட் ஒதுக்கப்பட்டது.

Saleth stephi graph

மாநிலங்களவை எம்பி ஆகிறார் மநீம தலைவர்  கமல்ஹாசன்.

தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 19 -ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

சண்முகம், சந்திரசேகரன், வில்சன், அப்துல்லா, அன்புமணி, வைகோ ஆகிய 6 ராஜ்யசபா எம்.பி -களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் நிறைவடைய உள்ள நிலையில் திமுக தனது வேட்பாளர்களை தபோது அறிவித்துள்ளது.

எம்.பி ஆகிறார் கமல்ஹாசன்..!

காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி சீட்களில் 4 சீட்டுகள் திமுகவும் 2 சீட்டுகள் அதிமுகவும் கொண்டுள்ளன. இந்நிலையில்தான் திமுக தனது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு எந்த சீட்டும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் கமல் ஹாசன் மாநிலம் முழுவதும் திமுக-விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். எனவே அடுத்து வரும் தேர்தலில் ஒரு சீட் கமல்ஹாசனுக்கு கொடுக்கப்படும் என வாக்களிக்கப்பட்டது. எனவே ஏற்கனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றும் விதமாக  திமுக சார்பில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு எம்.பி சீட் ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது கமல்ஹாசன் முதன் முறையாக எம்.பி ஆகிறார்.

திமுக -வை சேர்ந்த வழக்கறிஞர் பி.வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோருக்கு ராஜ்ய சபா எம்.பி சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் வில்சன் மட்டுமே இந்த முறையும் பதவியில் தொடர்கிறார்.

அதிமுக-வின் நிலை என்ன?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வின் தேர்தல் கூட்டணி தேமுதிக மட்டும்தான். கூட்டணியின்போதே தேமுதிக -விற்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக எடப்பாடி உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது எடப்பாடி “தேமுதிக -விற்கு மாநிலங்களவை எம்.பி சீட்டை வாழங்க முடியாது!” திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால் பிரேமலதா செம கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. எனவே அதிமுக கட்சிக்காரர்களுக்கே எம்.பி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. 

அன்பு மணிக்கு சீட்!?

அதிமுக- பாஜக கூட்டணிக்கு பிறகு  பாமக -வை NDA கூட்டணியில் இணைக்கு பாஜக பெரும் விருப்பம் தெரிவித்து வருகிறது. எனவே மீண்டும் ஒரு எம்.பி சீட்டை அன்புமணிக்கு வழங்க வேண்டும் என பாமக -கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எடப்பாடி என்ன யோசிக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்