தமிழ்நாடு

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி...மக்கள் தான் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் - ஈபிஎஸ்!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே. நகரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர், எம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுக இரண்டாக உடைந்ததாகவும், இவை அனைத்தையும் தாண்டி ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்ததாகவும் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதி  ஸ்டாலினை வைத்து தன்னை வளர்த்து கொள்கிறார் என்றும், அது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி என்றும் விமர்சித்துள்ளார்,

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி இந்தியாவிலே திமுக ஆட்சி தான் என்றும், எழுதுகின்ற பேனாவை மாணவர்களுக்கு கொடுங்கள் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர்கள்  திட்டம் மீண்டும் அதிமுக ஆட்சியில் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றால் மக்கள் தான் அதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டுமெனவும், அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது எனவும் ஈபிஎஸ் சூளுரைத்தார்.