தமிழ்நாடு

"திமுக - ஆறு"... "அதிமுக - கடல்"... கடல் ஒரு போதும் ஆற்றில் கலக்காது - ஓ.பன்னீர்செல்வம்

திமுகவில் அதிமுக சங்கமமாகிவிடும் என்ற அமைச்சர் ஐ.பெரியசாமியின் பேச்சுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணி பலத்தோடு உள்ளாட்சி தேர்தலில் செயற்கையான வெற்றியை திமுக பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திமுக என்பது ஆறு போன்ற ஒரு குடும்ப கட்சி என விமர்சித்துள்ள அவர், அதிமுக கடல் போன்ற மாபெரும் மக்கள் இயக்கம் என்றும், கடல் ஒரு போதும் ஆற்றில் கலக்காது எனவும் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். அதிமுகவை உருவாக்கி ஆட்சி அமைத்தபோது, அவரது அழைப்பினை ஏற்று திமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகியதால்  திமுக கூடாரம் காலியானதாகவும், ஆனால் மக்கள் இயக்கமான அதிமுக ஒருநாளும் திமுகவில் சங்கமமாகாது எனவும் தெளிவு படுத்தியுள்ளார்.