தமிழ்நாடு

நீட் தேர்வு மரணத்திற்கு திமுக தான் காரணம்- எச்.ராஜா

நீட் தேர்வு மரணத்திற்கு திமுக தான் காரணம் என பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது பதியப்பட்ட 5 வழக்குகள் குறித்து விசாரணைக்காக அவர் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , இந்து அறநிலையத்துறை அமைச்சர் செயல் பாபு அல்ல செயலற்ற பாபு  என கூறினார்.

மேலும்  அமைச்சர் சேகர் பாபுவின் செயல்பாடுகள், வெற்று அறிக்கை மற்றும் இந்து கோயில்கள் அனைத்தையும் மூடவேண்டும் என்பதாக இருக்கிறது என தெரிவித்த அவர், நீட் தேர்வு மரணத்திற்கு திமுக தான் காரணம் என்றும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் நீட் அமல்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

தமிழகத்தின் புதிய ஆளுநர் குறித்த கேள்விக்கு தமிழகத்திற்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆளுநராக வருவது புதிதல்ல என்றார்.