தமிழ்நாடு

பொங்கல் பரிசாக 5000 வழங்க சொன்ன திமுக...இப்போ 1000 வழங்க காரணம் என்ன? ஈபிஎஸ் கேள்வி!

Tamil Selvi Selvakumar

அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 5 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்று வலியுறுத்திய மு.க.ஸ்டாலின், தற்போது  வெறும் ஆயிரம் ரூபாய் அறிவித்தது ஏன்? என ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வீடுகளை திறந்து வைத்த ஈபிஎஸ்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அன்னை தெரசா நகரில் நரிக்குறவர் சமூக மக்களுக்கு 20 வீடுகளை முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். 

5000 வழங்க வலியுறுத்திய திமுக அரசு:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியின் போது பொங்கல் தொகுப்பாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாய் மற்றும் செங்கரும்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்கியபோதும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

கேள்வி எழுப்பிய ஈபிஎஸ்:

ஆனால், தற்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரிசி, சர்க்கரை, கரும்பு உடன் வெறும் 1000 ரூபாய் மட்டும் வழங்குவது ஏன்? என ஈபிஎஸ் கேள்வி எழுப்பினார். 

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது:

ஏழைகள் மீது தமிழக அரசுக்கு அக்கரை இல்லை என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக எப்போதும் ஏழை எளியவர்களுக்காகவே ஆட்சி செய்தது என்றும், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.