kn nehru 
தமிழ்நாடு

முதல் வெற்றியை பதிவு செய்தது திமுக! திருச்சி மேற்கில் மீண்டும் தனது கோட்டையை தக்கவைத்த கே.என் நேரு..

மற்ற தொகுதிகளில் திமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது

Muthu Lakshmi

முதல் வெற்றியை பதிவு செய்தது திமுக. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 நடந்து முடிந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியாக உள்ளது. காலை 8 மணி முதல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தொடர்ந்து பின்னடைவை சந்தித்த வந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தற்போது ஒரு சில இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மேற்கு தொகுதியில் கே.என் நேரு வெற்றி பெற்றுள்ளார். 

காலை 8 மணிக்கு தொடங்கிய தபால் வாக்கு எண்ணிக்கையில் எதிர்பாராத திருப்பமாக, அமைச்சர் கே. என். நேரு பின்னடைவை சந்தித்து வந்தார். பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வேட்பாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்து வந்தார். சற்றுமுன் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலைக்கு வந்த கே. என். நேரு தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

மற்ற தொகுதிகளில் திமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. திருச்சி கிழக்கில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் முன்னிலை வகித்து வருகிறார். மாநிலம் முழுவதும் பெரும்பான்மையான தொகுதிகளை தன வசம் வைத்துள்ளது தவெக. ஆட்சியில் மாற்றம் எனும் குறிக்கோளை நோக்கி தமிழகம் நகர்வதிக்க தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்