தமிழ்நாடு

ஆளுநரை யாரும் தாக்கி பேசக்கூடாது...சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் போட்ட உத்தரவு!

Tamil Selvi Selvakumar

சட்டமன்றத்தில் திமுகவின் எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆளுநரை தாக்கி பேசக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏக்களை அறிவுறுத்தியுள்ளார். 

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் :

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு அறிவுறுத்தல்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அறிவுரை வழங்கிய முதலமைச்சர்:

அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி சார்ந்த பிரச்னைகளை முன்வைத்து பேச வேண்டும் எனவும், எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டாலும் அமைதி காக்க வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டாம்:

தொடர்ந்து, நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ஆளுநருக்கு எதிராக எந்த ஒரு உறுப்பினரும் கருத்துக்களை தெரிவிக்க கூடாது எனவும், ஆளுநருக்கு எதிராக பேசக்கூடாது எனவும், ஆளுநருக்கு எதிராக பேனர் வைக்கவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.